பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
robyn bernard

பிரபல நடிகை ராபின் பெர்னாட் சடலம் திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1984-ம் ஆண்டு ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ என்ற நாடகத் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராபின் பெர்னார்ட் . 1984 முதல் 1990 வரை வெளியான ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ தொடரில் ராபின் பெர்னார்ட், டேவிட் க்ரோவின் வில்லனான டி.எல்.பிராக்கின் மகளாக நடித்தார்.

robyn bernard

1990-ல் அந்த தொடரில் இருந்து அவர் வெளியேறும் வரை 145 எபிசோடுகளில் நடத்துள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த 1981-ம் ஆண்டில் வெளிவந்த ‘திவா’, 1986-ம் ஆண்டில் வெளியான ‘பெட்டி ப்ளூ' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'வாய்சஸ் ஃப்ரம் தி ஹைஸ்கூல்' என்ற நாடகத்தில் சைக்காலஜிஸ்ட்டாக கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கலிபோர்னியா மாகாணம் சான் ஜசிந்தோவில் ஒரு திறந்தவெளிப் பகுதியில் நேற்று இவரது சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் போலீசார் அங்கு சென்று ராபின் பெர்னார்ட்டின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

robyn bernard

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிந்து அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் இருந்து விலகியிருந்த நிலையில், ராபின் பெர்னாட் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web