‘லியோ’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோ!!

 
Leo

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘லியோ’ படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகை இணைந்துள்ளார்.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

A post shared by Santhi Mayadevi (@santhi_mayadevi)

ஏற்கனவே ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்துவரும் நிலையில் புதிதாக பிரபல மலையாள பட நடிகை இந்தப் படத்தில் நடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம் 2’ படத்தில் நடித்த சாந்தி மாயாதேவி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இதனை உறுதி செய்துள்ளார்.

From around the web