பிரபல நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

 
Meetha Ragunath

‘குட் நைட்’ படம் மூலம் ரசிகர்களின்  கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத்தின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2022-ல் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீதா ரகுநாத். அதன் பின்னர் சென்ற ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த 'குட் நைட்' திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தார்.

Meetha Ragunath

இந்த படத்தில் அழகான, எளிமையான நடிப்பை வெளிப்படுத்திய மீதா ரகுநாத், இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு பதிவிடும் வகையில், இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மீதா ரகுநாத்தின் சொந்த ஊரான ஊட்டியில் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

A post shared by Meetha Raghunath (@the.meethling)

இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இரு வீட்டார் முன்னிலையில், நண்பர்கள், உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை மீதா ரகுநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web