பிரபல நடிகை நிச்சயதார்த்தம்.. காதலரை கரம் பிடிக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்!!

 
Aravish - Harika

சீரியல் நடிகர் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் கவனம் பெற்ற நடிகர் அரவிஷ். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ மற்றும் ‘இலக்கியா’ ஆகிய தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ தொடரின் கதாநாயகி ஹரிகாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

Aravish - Harika

‘திருமகள்’ தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் என்ட்ரியானவர் ஹரிகா. தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் தமிழ் சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார். இந்தத் தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. இவர், ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர். அரவிஷ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்திருக்கின்றனர்.

ஹரிகாவும், அரவிஷூம் அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் சேர்ந்து ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தனர். மேலும், அவர்கள் காதலிப்பதையும் வெளிப்படையாக அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். இருவரது வீட்டிலும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நேற்று (நவம்பர் 19) இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திருமண நிச்சியதார்த்ததில் இரு குடும்பத்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும் திருமண நிச்சயதார்த்தம் குறித்த, சில போட்டோசை இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டாசில் வெளியிட்டு, தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web