ஆபாச இணையதளங்களில் நிர்வாண படங்களை வெளியிடுவேன்... தயாரிப்பாளர் மிரட்டியதாக பிரபல நடிகை பகீர் புகார்!!

 
swastika-mukherjee

ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் மிரட்டியதாக நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

2001-ம் ஆண்டு வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற வங்க மொழி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. அதனைத் தொடர்ந்து ‘காலா’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். 42 வயதாகும் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, பெங்காலி மற்றும் இந்தி மொழி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

swastika-mukherjee

தற்போது ‘ஷிபுர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் ஸ்வஸ்திகா முகர்ஜி, இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்துள்ள புகார் மனுவில், “இந்தி நடிகைகள் அனைவரும் எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள். இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான்தான். எனவே என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள் என்று சந்தீப் சர்கார் தொல்லை கொடுக்கிறார். ஆசைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

swastika-mukherjee

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடித்தி வருகின்றனர். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது அனைவரும் தெரியும். இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி மிரட்டியிருப்பது சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

From around the web