பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி... என்னாச்சு... பதறிய ரசிகர்கள்!!

 
Navya Nair

பிரபல நடிகை நவ்யா நாயர், திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

2001-ல் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். அதனைத் தொடர்ந்து, நந்தனம், கல்யாணராமன், குஞ்சிக்கோனன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2004-ல் வெளியான ‘அழகிய தீயே’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசகிளிகள், அமிர்தம், மாயகண்ணாடி, சில நேரங்களில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Navya Nair

சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா நாயர், திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். தற்போது ‘ஜானகி ஜானே’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் நவ்யா பங்கேற்று வந்தார். 

இந்த நிலையில் கோழிகோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. புரமோசன் பணிகளால் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான உணவு அருந்தியதால் அவருக்கு புட் பாய்சன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. 

நவ்யா பூரண நலத்துடன் திரும்பி வரும் வரை புரமோசன் பணிகளை நிறுத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இதனிடையே இவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும், வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள், விரைவில் நவ்யா நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web