பிரபல நடிகர் சகோதரி மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!

 
Mammootty

நடிகர் மம்மூட்டியின் சகோதரி ஆமினா நசீமா வயது மூப்பு மற்றும் உடல்நல கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.

1971-ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் மம்முட்டி. அதன்பின், 1980-ம் ஆண்டு கே. ஜி. ஜார்ஜ் எழுதி இயக்கிய மேளா திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 

1990-ல் வெளியான ‘மௌனம் சம்மதம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

Mammootty Sister

இவர், மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 7 கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் 13 பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசு அவருக்கு 1998-ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டிக்கு 2 சகோதரர்களுடன் அவரை விட இளைய  அமீனா, சவுதா மற்றும் ஷஃபியா  என்ற மூன்று சகோதரிகளும் உண்டு. அவர்களில் ஆமினா வயது மூப்பு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியை சேர்ந்தவர் மறைந்த பி எம் சலீம். இன்று காலை 10 மணி அளவில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mammootty

நடிகர் மம்முட்டியின் தாயார் கடந்த ஏப்ரல் மாதம் காலமான நிலையில் 6 மாதத்தில் சகோதரியும் இயற்கை எய்தியுள்ளளது மம்முட்டியின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மலையாள திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

From around the web