பிரபல நடிகருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
chiranjeevi

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

1978-ல் வெளியான ‘பிரணம் கரிது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து மனவூரி பாண்டவுலு, தாயாரம்மா பங்கரய்யா, கைதி, ஸ்வயம்க்ருஷி, ருத்ரவீனா, காரனா மொகுடு, சங்கர் தாதா எம்.பி.பி.எஸ், ஸ்டாலின், சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்ஃபாதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ‘போலோ சங்கர்’ படம் சமீபத்தில் வெளியானது. இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் சிரஞ்சீவி முழங்கால் வலியால் அவதிப்பட்டதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார்.

chiranjeevi

சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்தது.

ஒரு வாரம் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன்பிறகு ஐதராபாத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் 2 அல்லது 3 மாத ஓய்வுக்கு பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

chiranjeevi

சிரஞ்சீவிக்கு ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வலது மற்றும் இடது தோள்பட்டைகளில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. சிரஞ்சீவி போலவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் பிரபாசும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web