திருப்பதியில் பிரபல நடிகர்.. ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்ற நடிகர்!!

 
Prabhas

பிரபல நடிகர் பிரபாஸ் இன்று அதிகாலை திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

Adipurush

தற்போது, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் ‘சலார்’, நாக் அஸ்வின் இயக்கும் ‘புராஜக்ட் கே’, மாருதி இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படம் வருகிற ஜூன் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் ராமராக நடித்துள்ளார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளன. ஆதிபுருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பதியில் இன்று மாலை அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


இதற்காக திருப்பதி வந்துள்ள நடிகர் பிரபாஸ் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். இதையடுத்து பிரபாஸுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபாஸை காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web