பிக்பாஸில் இருந்து எவிக்ட்.. பிரபல இயக்குநரிடம் பணிபுரியும் ஜோவிகா!

 
Jovika

நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா தற்போது இயக்குநரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாக உள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Jovika

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். இவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

Parthiban - Vanitha

இந்நிலையில், ஜோவிகா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுநாள்வரை ஜோவிகா வனிதாவின் மகளாக தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோம். இனி வருங்காலத்தில் அவர் இயக்குனராக மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஆம், ஏனென்றால் ஜோவிகா தற்போது இயக்குநரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறாராம்.

இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஆகையால், வருங்காலத்தில் கண்டிப்பாக ஜோவிகா ஒரு நடிகையாகவோ அல்லது இயக்குனராகவோ களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.

From around the web