கனவு வீட்டில் கிரகப்பிரவேசம்.. மகிழ்ச்சியில் விஜே மணிமேகலை!

 
Manimegalai Manimegalai

விஜே மணிமேகலை தனது சொந்த ஊரில்  கட்டி வந்த பண்ணை வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து முடித்திருக்கிறார்.

90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக விஜே மணிமேகலை இருந்து வருகிறார். 90ஸ்க்கு மட்டுமல்லாமல் இப்போது உள்ள 2கே கிட்ஸ்களுக்கு கூட மணிமேகலை பேவரைட் தொகுப்பாளினி தான். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய அல்டிமேட் காமெடி நிகழ்ச்சிக்கு பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

Manimegalai

அதோடு சமூக வலைதளத்திலும் மணிமேகலை ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாகவே தனக்கு விஜய் டிவி தருவதை விட அதிகமான வருமானம் வருகிறது என்று ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் மணிமேகலை வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட அடிக்கடி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு வருவதை மணிமேகலை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் சொந்தமாக கட்டிக் கொண்டிருக்கும் வீடு, அவருடைய உறவினர்களோடு மணிமேகலை செய்யும் காமெடி போன்றவற்றையும் அந்த வீடியோவில் காணலாம். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பலருடைய மனதை கவர்ந்த மணிமேகலை கடந்த சீசனில் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அதோடு இனி நான் கோமாளியாக வரமாட்டேன் என்றும் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஊரில் கட்டி வந்த பண்ணை வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்திருக்கிறார் மணிமேகலை. மிக எளிமையாக நடந்திருக்கும் இந்த கிரகப்பிரவேச வீடியோவை யூடியூபில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மணிமேகலை. அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

From around the web