அப்படி சொல்லாதீங்க... கொன்னுடுவேன்... ரோஜா சீரியல் நடிகை ஆவேசம்!

 
Priyanka

தன்னுடைய திருமணத்தை ரகசிய திருமணம் என்று கூறினால் கொன்றுவிடுவேன் என்று ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு வெளியான ‘அந்தரி பந்துவாயா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, தீய வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களிலும் தமிழிலும் நடித்தார்.

சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் சீரியலுக்குச் சென்ற பிரியங்கா நல்காரி, 2015-ம் ஆண்டு முதல் தெலுங்குத் தொடர்களில் நடித்து வருகிறார். இதையடுத்து 2018-ம் ஆண்டு வெளியான ரோஜா என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.

இதில் நடிகர் சிப்புவுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்தார். நாளுக்கு நாள் இந்த சீரியல் பிரபலமாகி வருவதால் இதன் டிஆர்பியும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பலருக்கும் பிடித்த சீரியலாக நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த ரோஜா சீரியல். போன வருடம்தான் இந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டார்கள். 

ரோஜா சீரியலை முடித்துவிட்டு தற்போது சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார் பிரியங்கா நல்கரி. இந்த சீரியலும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பிரபல வில்லி நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டியும் நடிக்கிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. 

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி தனது காதலரை கரம் பிடித்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார் பிரியங்கா. இந்த ஹேப்பி எண்டிங்கிற்கு பின்னால் அவர், மிகுந்த சிரமங்களையும், கஷ்டங்களையும் கடந்துள்ளார்.

Priyanaka

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா, “ராகுல்ங்கிற கிட்டுவுக்கும் எனக்கும் 2018-ஆம் ஆண்டு, மே மாசம் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நான் செல்லமா அவரை 'கிட்டுலூ'ன்னு தான் கூப்பிடுவேன். தெலுங்கு சினிமாவுலயும் சரி டி.வி-யிலயும் சரி, அவர் முகம் பரிச்சயம். பரஸ்பரம் ரெண்டு பேரும் லவ் பண்ணினோம்.

ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டுல இருந்தா சௌகரியமா இருக்கும்னு சிலர் சொல்வாங்க, ஆனா எங்களுக்கு அது தான் வினை. போகப்போக ஒருத்தரையொருத்தர் பார்க்க, பேசக்கூட முடியாதபடி அவரோட கால்ஷீட்டும், என்னோட கால்ஷீட்டும் குழப்ப, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்கிறதுல லேசா மனஸ்தாபம்.

அதனால, 'எனக்கு இந்த ஃபீல்டே வேண்டாம்'னு கோபிச்சுட்டு மலேசியா போய், அங்க ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துட்டார். என் கிட்ட பேசாம என் ஃபோனையும் எடுக்க மாட்டேங்குறார். இந்த பிரச்னை எல்லாம் சீக்கிரம் சரியாகணும்ன்னு கடவுளை வேண்டிட்டு இருக்கேன்” எனத் தெரிவித்திருந்தார். 5 வருடங்களுக்குப் பிறகு ஒருவழியாக ராகுலை மணந்துள்ளார் பிரியங்கா. இவர்களது திருமணம் மலேசியா முருகன் கோயிலில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka

இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றதாக அனைவரும் கமெண்ட் செய்த நிலையில், அதை மறுத்துள்ளார் பிரியங்கா நல்காரி. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு லைவில் வந்த பிரியங்கா, அந்த தகவலை மறுத்துள்ளார். தன்னுடைய திருமணம் குடும்பத்தினர் ஒப்புதலோடுதான் நடந்தது என்றும் ஆனால் ராகுல் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில், அவர்கள் ஏற்றவுடன் அனைவரும் இணைந்து இந்த திருமணத்தை கொண்டாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் திருமணத்தை ரகசிய திருமணம் என்று சில மீடியாக்கள் கூறுவதாகவும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள பிரியங்கா, தன்னுடைய திருமணத்தை ரகசிய திருமணம் என்று கூறினால் கொன்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

From around the web