தனுஷுடன் ஜோடி சேரப்போகும் புது நாயகி யார் தெரியுமா?

இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மேய்ன் என அடுத்தடுத்து தனுஷ் நடித்த படங்கள் வெளிவரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோபிக், ராஜ்குமார் பெரியசாமியுடன் பெயர் வைக்கப்படாத படம் என தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் ஒரு படமும் நடிக்க உள்ளார்..
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
மமிதா பைஜு ‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ரெபல்’ படம் மூலம் அறிமுகமானார். இப்போது விஜய் - வினோத் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன், விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவாகும் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.