ரஜினியுடன் குத்தாட்டம் போட ரெடியாகும் நடிகை யார் தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.
1986ல் வெளியான மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் கன்னட இயக்குனரும் பிரபல நடிகருமான உபேந்திராவும், மலையாள நடிகர் சௌபின் சாஹிரும் இணைந்துள்ளனர். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். குத்தாட்டப் பாடலுக்கு பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே இந்திப்படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போட்டிருப்பார். ஜெயிலர் பட பாணியிலேயே தெலுங்கு, கன்னட, மலையாள ஹீரோக்களை இறக்கி விட்டுள்ள லோகேஷ் கனகராஜ், கூடுதல் க்ளாமருக்கு பூஜா ஹெக்டேவை களம் இறக்கியுள்ளார். பான் இந்தியா படமா வருதோ இல்லையோ, பான் தென்னிந்தியா படமா வந்துருக்குன்னு நிச்சயமா சொல்லலாம்!