காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? தனுஷின் ‘ராயன்’ டிரெய்லர் ரிலீஸ்!

 
Raayan

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே  களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

Raayan

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மே 9-ம் தேதி இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மே 24-ம் தேதி ‘வாட்டர் பாக்கெட்’ என்ற 2வது பாடலும், கடந்த 5-ம் தேதி 3-வது பாடல் ‘ராயன் ரம்பிள்’ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டிரெய்லர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரெய்லர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்.ஜே.சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.

டிரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர். படத்தில் எஸ்ஜே கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.

பருத்திவீரனில் சரவணன் கேரக்டர் பேசப்பட்டது போன்று, இந்த படத்திலும் சரவணன் கேரக்டர் பேசப்படலாம். புதுப்பேட்டை, வட சென்னை போன்று கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web