காதல் திரைப்படம் இசையமைப்பாளர் இப்போ என்ன பண்ணுகிறார் தெரியுமா?
பரத் சந்தியா ஜோடி நடித்து பாஜாஜி சக்திவேல் இயக்கத்தில் முதல் படமான காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தமிழ்த் திரையுலகத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமானர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றும் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு சொல்லி கொள்ளும்படி அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை
ஜோஷ்வா ஸ்ரீதர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு சரியான படங்கள் வரல்ல, இசையமைத்தது எதுவும் சரியா போகல. சில படங்கள் நல்ல படங்களா இருந்தும் பெரிய பேனர், பெரிய நடிகர்கள் இல்லாததால் பெரிய வெற்றிகள் கிட்டவில்லை.
என்ன செய்யலாம் என நான் ஆழ்ந்து சிந்தித்த நேரத்தில் கோவிட் வந்து உலகத்தையே முடக்கிபோட்டு விட்டது. என்னையும் அது முடக்கியது. இசையை எல்லாம் விட்டுட்டு வேற ஏதாவது ஒண்ணு கத்துக்குவோம்னு தோணுச்சு. சின்ன வயசில் இருந்து ஜோதிடம் மேல ஆர்வம். அது பெரிய கடல் என்றாலும், நானும் அதை கத்துக்கிட்டேன். ஜாதகம் பார்த்து சொல்வதில் சிலருடைய கஷ்டத்தை தீர்த்துவைப்பது திருப்தியாக இருந்தது. இருந்தாலும் அவங்களை வழிநடத்துவது சிரமமாக இருந்தது என்கிறார் ஜோஷ்வா ஸ்ரீதர்.மேலும், 2020ல் இருந்து இசையமைப்பதை நிறுத்தி விட்டேன் என்றும் கூறியுள்ளார் ஜோஷ்வா ஸ்ரீதர்.