தாத்தா கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா..? வெளியானது ‘மார்கழி திங்கள்’ டீசர்!

 
Margazhi Thingal

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

1999-ல் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Margazhi Thingal

மனோஜ் பாரதிராஜா, தற்போது ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். கிராமத்து காதல் கதையாக படம் உருவாகியிருப்பதை டீசர் உறுதி செய்கிறது. அதிலும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான காதல். இரு காதலர்கள் மட்டும டீசரின் பெரும்பாலான காட்சிகள் நிறைந்திருக்கும் நிலையில், அங்கே மூன்றாவது பின்னணி இசையால் இதம் சேர்க்கிறார் இளையராஜா. 

அவரின் இசையில் பின்னணியில் ஒலிக்கும் ‘கோரஸ்’ ஈர்க்கிறது. டீசரில் இறுதியில் பாரதிராஜா கொடுக்கும் ரியாக்‌ஷன் காதலுக்கு எதிரியாக அவர் இருப்பார் என்பதை உணர்த்துகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

From around the web