தளபதி 68 படத்தின் பெயர் என்ன தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!

 
Thalapathy 68

விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Thalapathy 68

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.

இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்திற்கு பாஸ் அல்லது பசில் என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “இப்போ தான் எல்லா அப்டேட்டையும் பார்த்தேன். இங்களின் அன்புக்கு நன்றி. உண்மையான ஒன்று வெளியாகும் வரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு ரொம்பவே ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறார். கண்டிப்பாக அது பாஸும் இல்லை பசிலும் இல்லை”  என பதிவிட்டு டைட்டில் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

From around the web