விவாகரத்து வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த விக்கி - நயன் தம்பதி!

 
Nayanthara

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

Nayanthara

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவனை இஸ்டாகிராமில் அன்பாலோ செய்துவிட்டதாக இணையத்தில் செய்தி ஒன்று வைரலானது.

இதனை கண்ட நெட்டிசன்கள் இருவருக்கும் எதோ ப்ரிச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும் இவர்கள் இன்னும் சில நாட்களில் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் வாய்க்கு வந்தபடி வதந்திகளை பரப்பி வந்தனர். மேலும், ’என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு அவள் கண்ணீருடன் எப்பொழுதும் பயணப்பட்டுக் கொண்டே இருப்பாள்’ என்ற கேப்ஷனையும் பகிர்ந்திருந்தார்.

A post shared by Navin (@flutenavin)

இந்த விஷயங்கள் எல்லாம் சேர்த்துதான் விக்கி- நயன் விவாகரத்தா, இருவரும் பிரியப் போகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மீண்டும் விக்னேஷ் சிவனை பின் தொடர ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் நயன்தாரா புகைப்படத்துடன் கூடிய அவார்டு அறிவிப்பு ஒன்றைப் பகிர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

From around the web