‘தளபதி 68’ அப்டேட்ஸ் விரைவில் வரும்.. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிவிப்பு
‘தளபதி 68’ படத்தின் அப்டேட்ஸ் விரைவில் வரும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.
இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. இப்படத்திற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியானது. ‘பசில்’ அல்லது ‘பாஸ்’ என்பதுதான் தலைப்பாக இருக்கும் என கூறப்பட்டது. இந்த தகவல்கள் வெளியானவுடன் தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் படத்தின் பெயர் பாஸ் அல்லது பசில் இரண்டுமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Merry Christmas everyone!! Spread love!! #Thalapathy68 updates coming sooooon🙏🏽🙏🏽 enjoy the festive season🎄🎁🥂 #MerryChristmas pic.twitter.com/6PxA3t9zir
— venkat prabhu (@vp_offl) December 25, 2023
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பை பரப்புங்கள். தளபதி 68 அப்டேட்ஸ் விரைவில் வரும். பண்டிகை காலத்தை அனுபவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.