இயக்குநர் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

 
Ravi Shankar

வருஷமெல்லாம் வசந்தம் படத்தை இயக்கிய இயக்குநர் ரவி சங்கர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 63.

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜின் ‘பாக்யா’ வார இதழில் வெளியான ‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் பத்திரிகையில் நுழைந்தவர் ரவி சங்கர். இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார். விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலை எழுதினார்.

Ravi Shankar

இதனைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா, குணால் நடிப்பில் வெளியான படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’. இந்தப் படத்தை இயக்கியவர் ரவி சங்கர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் ரவி சங்கரே எழுதியிருந்தார்.

ரவி சங்கர் திருமணம் செய்துகொள்ளவில்லை. சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் தனியே வசிந்து வந்த அவர், தன் அறையில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரவி சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

RIP

இவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From around the web