பிரபல இயக்குநர் பிரபு ஜெயராம் திடீர் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

 
Prabhu Jayaram

பிரபல இயக்குநர் பிரபு ஜெயராம் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2021-ல் சோனி லைவ் ஓடிடியில் வெளியான படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கி இருந்தார். ஆர்.எஸ்.கார்த்திக், அய்ரா, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

ennanga-sir-unga-sattam

குறிப்பாக இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகள், இரண்டு கதைகளிலுமே அதே நடிகர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இதில் முதல் பாதிக் கதை, விடலைப் பருவத்தில் பெண்கள் மோகம் கொண்டு அலையும் ஒரு இளைஞனைப் பற்றிய நகைச்சுவை கலந்த கதை. இரண்டாவது பாதி, இட ஒதுக்கீட்டுக்குள் இருக்கும் முரண்களை இயக்குநர் தன் பார்வையில் பேசியிருக்கும் கதை.

முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் நடிகர்களின் பங்களிப்பு கச்சிதமாக இருக்கிறது. இத்தனைக்கும் நடித்திருப்பவர்கள் அதே நடிகர்கள்தான் என்றாலும் இரண்டாவது பாதியில் அவர்கள் அந்தந்தக் கதாபாத்திரங்களில் சரியாகப் பொருந்திப் போகிறார்கள். இதனையடுத்து பிரபு ஜெயராமின் அடுத்த பட அப்டேட்டுக்காக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ennanga-sir-unga-sattam

இந்த நிலையில், அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சென்னையில்  இயக்குநர் பிரபு ஜெயராம், தீபா என்பவரை பெரும் ஆடம்பரமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web