இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

இசைஞானி இளையராஜாவுடன் இயக்குனர் மணிரத்னத்தினமும் இன்று பிறந்தநாள் காண்கிறார். மணிரத்னத்திற்கு திரையுலகினர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிரத்தினத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில் நீண்ட நாள் நண்பரும் உறவினருருமான மணிரத்னமும் தானும் சினிமாவை தொடர்ந்து நேசித்து வருபவர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரேமிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.