திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் வீடியோ!

 
Leo team

‘லியோ’ படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leo

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், லியோ பட ரிலீஸ் நெருங்கி வருவதால், வழக்கம்போல் தன்னுடைய செண்டிமெண்ட்டை கடைபிடித்துள்ள லோகேஷ் தன்னுடைய டீம் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் திருப்பதி மலையேறும் போது கோவிந்தா கோஷமிட்டபடி செல்லும் வீடியோவை இயக்குனர் ரத்னகுமார் பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

From around the web