ஹீரோவாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. வெளியான சூப்பர் அப்டேட்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
மாநகரம் படம் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்தை இயக்கும் அளவிற்கு கோலிவுட்டில் முன்னேற்றம் கண்டுள்ளார், இடையில் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பான் இந்தியா இயக்குனராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.
ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் ‘ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தில் கௌரவ வேடத்தில் படத்தின் கடைசியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார்.
#Inimel Role Reverse is the New Verse#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey@ikamalhaasan #Mahendran @Dir_Lokesh @shrutihaasan @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @yanchanmusic @SowndarNallasa1 @gopiprasannaa @Pallavi_offl… pic.twitter.com/KHFbEVv0az
— Raaj Kamal Films International (@RKFI) March 19, 2024
அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகராக நடிக்கப்போகும் முதல் ஆல்பம் பாடல் இதுவே. இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.