மணிரத்னம் படத்தில் வசனம்... தக் லைஃப் பற்றிய எதிர்பாராத விமர்சனங்கள்!!

 
Thug Life

நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் இணைந்த தக் லைஃப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. வழக்கம் போல் திரையரங்கு வாசலில் கேமராவுடன் நின்று கொண்டு படம் எப்படி இருக்கு என்ற கேள்வியை சில பல ஊடகங்கள் எழுப்பி வருகின்றனர்.

குணா படத்தில் கமல் சொல்வது போல், அது என்ன மாயமோ தெரியவில்லை இப்படி கேமராவுக்கு முன்னால் வந்து பேசிய பலரும் தக் லைஃப் படத்தில் பேசிகிட்டே இருக்காங்க என்று கூறியுள்ளனர். வீட்டில் ஒருத்தருடன் ஒருத்தர் பேசிகிட்டு இருப்பது போல பேசிகிட்டே இருக்காங்கன்னு ஒரு பெண்மணி கூறியுள்ளார்.

இவங்க சொல்றதைப் பார்த்தா படம் முழுக்க எல்லோரும் தொண தொணன்னு பேசிகிட்டு இருக்காங்க போல.. ஆனா மணிரத்னம் படத்தில் இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?

படம் முழுக்க சின்ன சின்ன வசனங்கள் தான் மணிரத்னத்தின் ஸ்டைலாகவே இருந்துவந்துள்ளது. தளபதி படத்தில் ரஜினி பேசும் “ தேவா பொழைச்சுக்குவான்” , பதிலுக்கு “டாக்டர் சொன்னரா?”, மீண்டும் ரஜினி “இல்லே தேவாவே சொன்னான்” என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

இப்படி நறுக் வசனங்களுக்கு பெயர் போன இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தில் பேசிகிட்டே இருக்காங்க என்ற விமர்சனம் ரொம்பவும் புதுசாவே இருக்கு. ஒருவேளை மணிரத்னம் படத்தைப் பார்த்துப் பழகிப்போனவர்களுக்கு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் கொஞ்சம் ஓவராத் தெரியுதோ?

From around the web