தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக்... டீசர்... மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.
1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது. படத்தின் பூஜை கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காடு மற்றும் மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், உரிய அனுமதியின்றி படபிடிப்பு நடத்தப்பட்டதாக கூறி, படப்பிடிப்பை நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.
Wishing the Inspiration of youth , our @dhanushkraja many more years of success 🤗♥️#CaptainMiller 's
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 10, 2023
FIRST LOOK - June 2023
TEASER - July 2033 @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan@gvprakash @siddnunidop@dhilipaction pic.twitter.com/TZHYEDO5q8
இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகார பூர்வமாக சமூக வலைதளப்பாக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவலில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும் டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.