தனுஷ் 51 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

 
Dhanush 51

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ‘தனுஷ் 51’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தனுஷின் பயணம் டோலிவுட், பாலிவுட் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. ப பாண்டி படத்திற்கு பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ், தற்போது ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Dhanush 51

இதனிடையே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த  12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

From around the web