கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் தனுஷ்.. கவனம் பெறும் ‘கேப்டன் மில்லர்’ டீசர்!!

 
Captain Miller

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

Captain Miller

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான இன்று (ஜூலை 28) ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 100 வினாடிகளுக்கும் குறைவாகவே உள்ள டீசரில் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் படததில் காட்டியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் சிலரின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய படம் என்பது புரிகிறது.

தனுஷ் துப்பாக்கியால் தோட்டாக்களை சுடும் விதமும் அற்புதம். பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவா ராஜ்குமார் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இப்படம் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web