கமலுடன் இணையும் தனுஷ் - நெல்சன்.. படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்!

 
Dhanush-Nelson

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.

Jailer

இதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதை கூறியிருந்தார்.

Kamal

ஆனால் அந்த திரைப்படத்திற்கு முன்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி விட்டார். அதில் தனுஷ் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், ஜெயிலர் திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகு அடுத்த படத்திற்கான பணிகளை நெல்சன் மேற்கொள்ள உள்ளார்.

From around the web