தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், தனது கணவர் ஃபஹத் அகமதுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.
2009-ல் வெளியான ‘மாதோலால் கீப் வாக்கிங்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாரா பாஸ்கர். தொடர்ந்து குஜாரிஷ், தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, ஔரங்கசீப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2013-ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் இந்தி படமான ‘ராஞ்சனா’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
இவர், பாலிவுட் திரையுலகில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதை தாண்டி, தன்னை பற்றிய வதந்திகளுக்கும், விமர்சனங்களுக்கும் மிகவும் போல்டாக பதிலடி கொடுத்து வந்தார். குறிப்பாக பாஜக தலைமையிலான மோடி அரசுக்கு எதிராக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கருத்துக்களை வாரி இறைத்து, பல முறை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீண்ட காலமாக, சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மதம் இவர்கள் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன பின்னர், இவர்களுக்கு திருமண ரிசெப்ஷம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த நிலையில் தற்போது ஸ்வாரா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். பேபி பப்புடன் கணவர் அரவணைப்பில் உள்ளது போன்ற புகைப்படங்கள் சில வற்றை இவர் வெளியிட, அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது.