வெறித்தனமாக ஒர்கவுட்.. தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா... வைரல் வீடியோ!

 
Jyothika

நடிகை ஜோதிகா வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார்.

1999-ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. அதனைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி, தொனலி, 12 பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Jyothika

இவரின் துருதுரு நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்தபோதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து கதாநாயகி சார்ந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

A post shared by Jyotika (@jyotika)

இந்த நிலையில், தற்போது பிட்னெஸ்ஸில் குதித்துள்ள ஜோதிகா,வெறித்தனமாக தான் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். சமீபத்தில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒர்கவுட் வீடியோ  தீயாய் பரவி இணையத்தில் வைரலாகிய வருகிறது.

From around the web