மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் கூல் சுரேஷ்! 

 
Manjal Veeran Manjal Veeran

‘மஞ்சள் வீரன்’ படத்தின் மூலம் நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இந்த படத்தை செல் அம் இயக்க இருந்தார். இவர் ஏற்கனவே ‘திருவிக பூங்கா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

Manjal Veeran

இந்த நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும் , பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக செல் அம் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து டிடிஎஃப் வாசன், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, மேலும் இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை என்று கூறியுள்ளார். 


இந்த நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது. 

From around the web