சுவர் ஏறி குதிக்க போன கூல் சுரேஷ்.. வெளியான அதிர்ச்சி காரணம்.. வைரல் வீடியோ!

 
Cool Suresh

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீசனும் 70 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் மிஞ்சி இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிக் பாஸில் இருந்து வெளியே போக வேண்டும் என்பதற்காக சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்தார். சுவற்றில் மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கும்போது அவரை பிக்பாஸ் அழைத்து அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த இடத்தில் மணிச்சந்திரா மட்டுமே இருந்த நிலையில் அவரும் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

cool Suresh

அதே நேரத்தில் பிக் பாஸ் எதற்காக நீங்க இப்படி ஒரு செயலை செய்றீங்க? இதனால் நீங்க என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு கூல் சுரேஷ் எனக்கு வீட்டில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை தீர்க்காமல் நான் வந்துவிட்டேன். இப்போ எனக்கு வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது என்று சொல்ல, நீங்க இப்படி செஞ்சி கெட்ட பேரோட போகிறது உங்கள் வீட்டில் உள்ளவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா? என்று பிக் பாஸ் கேட்கிறார்.

அதற்கு சுரேஷ் இல்லை என்று சொல்கிறார். பிறகு எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நல்லபடியாக விளையாடி வெற்றியோடு போக வேண்டும் என்று தானே இங்கே வந்தீர்கள். அந்த வழியில் தானே இவ்வளவு தூரம் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதோடு உங்களுடைய வீட்டினர் நீங்கள் நல்லபடியாக இருப்பதை பார்த்து சந்தோஷம்தான் படுவார்கள்.

இது போல நீங்களாக வெளியே போகிறேன் என்று இந்த வீட்டின் ரூல்ஸ் மீறி செய்தால் அவர்களும் கஷ்டப்படதானே செய்வார்கள் என்று அட்வைஸ் கொடுத்து அதோடு அதட்டும் தோணியிலும் பேசியிருந்தார். பிறகு கூல் சுரேஷ் ஒரு வழியாக சமாதானம் ஆகி இருக்கிறார். ஆனாலும் இன்று இனி என்ன பிரச்சனை நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இது 24 மணி நேர எபிசோடில் இன்று காலையில் நடந்திருப்பதால் இது ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகுமா என்பதும் தெரியவில்லை.


ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு கூல் சுரேஷ் சோகமாக இருப்பதை பார்த்து விசித்திரா என்ன ஏன் இப்படி இருக்கிறீங்க என்று அன்பாக பேச அதனால் சுரேஷ் தன்னுடைய வீட்டு பிரச்சினைகளை எல்லாம் விசித்திராவிடம் பேசி இருக்கிறார். ஆனால் அதை சொல்லி அடுத்த நாள் விசித்திரா கூல் சுரேஷை நாமினேசன் செய்ததை கூல் சுரேஷால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தான் நம்பியவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றே புலம்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்த இடத்தில் தான் இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் இப்போது கூல் சுரேஷ் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதுபோல சென்ராயன் தன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முடியவில்லை என்று சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல காமெடி நடிகையான மதுமிதாவும் பிக் பாஸ் போட்டியாளர்களோடு ஏற்பட்ட பிரச்சனையால் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை தான் வெளியே போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்து பிறகு கையை வெட்டி பிரச்சனை செய்திருந்தார். அதனால் அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web