குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறினாரா..? மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

 
Manimegalai

தான் மதம் மாறி விட்டதாக பொய் செய்தி பரப்பியவருக்கு தகுந்த தொகுப்பாளர் மணிமேகலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. சின்னத்திரையில் சீரியல்களை பார்த்து அலுத்து போய் இருந்த ரசிகர்களுக்கு இந்த காமெடியான ரியாலிட்டி ஷோ ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதன் காரணமாக தான் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 2019-ல் தொடங்கி இப்போது வரைக்கும் தொடர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் கோமாளிகளாக தொடர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான போட்டியாளராக தொகுப்பாளர் மணிமேகலை இருந்து வந்தார்.

அதற்கு முன் சன் மியூசில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

Manmegalai

திருமணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை உணர்வால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் அவர் விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று சிலர் பகிர்ந்து அவரது கணவரை குற்றம்சாட்டி வருகிறார்கள்.

செங்கம் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு என்று ட்விட்டர் கணக்கில் மணிமேகலை தலையில் முக்காடு போட்டபடியும், ஹுசைன் தொப்பி அணிந்தபடியும் உள்ள படத்தையும், திருமண கோலத்தில் இருவரும் இருக்கும் படத்தையும், தங்கள் திருமணம் குறித்து மணிமேகலை வெளியிட்ட ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது.


அத்துடன், ‘மணிமேகலை... எப்படி ஆரம்பிச்சது; எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா? லவ்_ஜிகாத். மதமேன பிரிந்தது போதும்’ என்று பாஜகவின் அந்த ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது. இதனை பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதைப் பார்த்து கடுப்பான மணிமேகலை, “இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டே இருப்பதற்கு, போய் உருப்படுகிற வேலையை பார்க்கலாம் இல்ல” என கேட்டு உள்ளார். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web