‘குக் வித் கோமாளி’ பிரபலத்துக்கு விபத்து.. ரசிகர்கள் ஷாக்!

 
Pavithra Lakshmi

நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

டான்ஸ், மாடல், ஃபேஷன் டிசைனர் என பல துறைகளிலும் முத்திரை பதித்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். முன்னதாக விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை.

Pavithra Lakshmi

பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு குக் வித் கோமாளி ஷோ நல்ல திருப்புமுனையாக அமைந்தது. மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் சினிமா நடிகையானார் இவர். பின்னர் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாகவும் பவித்ரா லட்சுமி நடித்திருந்தார்.

இதையடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ‘யுகி’ படத்தில் நடித்தார் பவித்ரா லட்சுமி.  இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ராவுக்கு 21 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக எந்த வித பதிவையும் பகிராமல் இருந்தார்.

A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)

இந்நிலையில் பவித்ரா லட்சுமி தற்போது பகிர்ந்துள்ள பதிவில், சிறிய விபத்தில் சிக்கியதாகவும் பெரிய அடி எதுவும் இல்லை எனவும், இது நடந்து மூன்று வாரங்கள் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்தில் இருந்து தற்போது மெல்ல மெல்லமாக மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தற்போது தன்னுடைய சுவிட்சர்லாந்து புகைப்படங்களை பகிர்வதாகவும், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் விரைவில் பவித்ரா குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web