குக் வித் கோமாளி சீசன் 5.. போட்டியாளர்கள் அறிவிப்பு

 
CWC 5

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்கயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை கொடுக்ககூடிய தொலைக்காட்சி விஜய் டிவி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா என்று விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளை பல வருடங்களாக  மக்களுக்கு வெகுவாக கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ அடுத்ததாக அனைவரையும் கவர்ந்த ஷோ தான் குக் வித் கோமாளி.

CWC 5

இந்த ரியாலிட்டி ஷோ, இதுவரை விஜய் டிவியில் 4 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. சமையல் போட்டியை மிகவும் வித்தியாசமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காண்பிக்கும் இந்த ஷோவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். முதலாவது சீசனில் பல செலிபிரிட்டிகள் சமைப்பதற்காக போட்டியாளர்களாக இந்த ஷோவில் களம் இறக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3வது சீசனில் ஸ்ருதிகா வெற்றி பெற்றார். 4வது சீசனில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கலக்கலான 5வது சீசன் ப்ரோமா வெளியாகியுள்ளது. அதில் வெங்கடே பட்டுக்கு பதில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்வது உறுதியானது. இதனால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. இந்த சூழலில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 நடிகர் வசந்த், சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி, நடிகை திவ்யா துரைசாமி, இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

From around the web