மார்பகத்தை குறித்து கமெண்ட் பண்றாங்க.. சீரியல் நடிகை நீலிமா ராணி மனவேதனை!!

 
Neelima Rani

சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மார்பகங்கள் குறித்து பலர் கேவலமாக கருத்து வெளியிட்டு வருவதாக சீரியல் நடிகை நீலிமா ராணி வேதனையோடு தெரிவித்துள்ளார்.

1992-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனைத் தொடர்ந்து பாணவர் பூமி, விரும்புகிறேன், தம், திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. நான் வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச நினைப்பார்கள், பேசுவார்கள், பாராட்டுவார்கள் ஆனால் சில நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்.

Neelima Rani

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சிலர் இப்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் ஒரு நாள் ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்த திட்டு திட்டினார். நாசமாய் போய்விடுவாய் என்று என்னை சபித்தார். 

என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் தான். எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நான் இப்படி எடை போட்டு விட்டேன் அதை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கிறது.

Neelima Rani

ஆனால் சிலர் கமெண்ட்களில் என்னுடைய மார்பகங்கள் பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று தோன்றும், பிறகு அப்படி சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன் என்று வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

From around the web