நடிகர் கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

 
Cheran

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் சேரன் இயக்கும் புதிய படத்தின் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1997-ல் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாணவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் 2002-ல் வெளியான ‘சொல்ல மறந்த கதை’ படத்தின் மூலம் கதைநாயகனாகவும் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார்.

Cheran

சேரன் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.


இந்த நிலையில் சேரன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத்தில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை சேரன் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

From around the web