பிரபல நடிகர் மீது வழக்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
Upendra

தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசிய நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் உபேந்திரா. இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘சத்யம்’ படத்தின் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானார். இவர் ‘உத்தம பிரஜாக்கிய’ என்ற பெயரில் கட்சி நடத்துகிறார். இவர் தனது கட்சி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் நேரலையில் பேசினார்.

Upendra

அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக பேசினார். அப்போது தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் உபேந்திரா மீது உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரின் பல பகுதிகளில் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே பல பகுதிகளில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


இதனையடுத்து நடிகர் உபேந்திரா தனது பேச்சுக்கு  மன்னிப்பு கோரியுள்ளார். இந்த மன்னிப்பு குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “குழந்தை பருவத்தில் இருந்து கடுமையான பசி பட்டினியோடு வாடியவன் நான். பசி, அவமானம், அடக்குமுறையோடு வாழ்ந்தவன் ஒரு வகுப்பினரை இழிவாகப் பேசுவேனா? அப்படி பேசுவதனால் என்ன பயன்? ஒரு பழமொழியை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லையா” என பதிவிட்டுள்ளார். 

From around the web