கேப்டன் மில்லர் இசை வெளியீடு விழாவில் பாலியல் சீண்டல்... ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை!

 
Captain Miller

கேப்டன் மில்லர் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யாவிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகவும் அவரை ஐஸ்வர்யா அடித்து விரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

Captain MIller

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ரகுபதியும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கும்பலாக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் அங்கு அமர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான அவர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காலில் விழ சொல்லி தர்மஅடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் 'சரக்கு' பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் ஐஸ்வர்யா ரகுபதிக்கு காட்டாயப்படுத்தி மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

From around the web