‘கேப்டன் மார்வெல்’ பட நடிகர் மரணம்.. ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல்!

 
Captain Marvel

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நடிகர் கென்னெத் மிட்ச்செல் காலமானார். அவருக்கு வயது 49.

2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் மார்வெல்’. காமிக்ஸ் கதைகளின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அதில், காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் தான் கென்னெத் மிட்ச்செல்.

kenneth-mitchell

கேப்டன் மார்வெல் திரைப்படம் மட்டுமன்றி ஸ்டார் ட்ரெக் டிஸ்கவரி உள்பட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். கனடிய நடிகரான அவர், அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் என்ற அறிய வகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

RIP

அவரது இறப்பை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். அதில் பல வருடங்களாக சிகிச்சை பெற்று கென்னெத் பலனில்லாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web