அம்பேத்கரை வைத்து வியாபார அரசியலா? விஜய்யை சாடிய யுகபாராதி !!

அம்பேத்கரை வைத்து வியாபார அரசியல் நடப்பதாக கவிஞர் யுகபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
ராப் பாடகர் பாடலாசிரியர் தினேஷ்க்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுகபாரதி " அரசியல் தறபோது வியாபாரம் ஆகிவிட்டது. அம்பேத்கர் பெயரில் வந்த புத்தகத்தின் வியாபாரத்திற்காகவே நடத்தப்பட்டது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த கூட்டத்தை நடத்தி தமிழ்நாட்டின் மவுனத்தையும் கலைத்து விட்டார்கள். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற பெயரை, அதை எப்படி விற்பனை செய்யலாம் என்பதற்காகவே வைத்தது போல இருக்கிறது . நாம் கார்ப்பரேட்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளோம்.
இதை குறித்தெல்லாம் நாம் மவுனத்தை கலைக்க வேண்டும். ராப் கலைஞனுக்கு குரல் வளம், உடல் பலம், எழுத்தாற்றல், அரசியல் அறிவு இருக்கனும். தத்துவ பின்புலம் இருக்கனும். இவ்வளவும் இருபபவராக தினேஷ் தன்னை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் எழுதனும். விஜய் முகத்தில் அம்பேத்கரை பார்க்கிறேன்னு எழுதக்கூடாது" என்று பேசியுள்ளார்.