ஸ்லோ பாய்சன் கொடுத்த அண்ணன்... சிறுநீரகம் செயலிழப்பு... நடிகர் பொன்னம்பலம் பகீர்!!

 
Ponnambalam

தனக்கு என் அண்ணனே ஸ்லோ பாய்சன் கொடுத்ததால் எனது சிறுநீரக செயலிந்ததாக நடிகர் பொன்னம்பலம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பொன்னம்பலம். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் பெரிய ஹீரோக்களுக்கு கூட வில்லனாக இவர் நடித்துள்ளார்.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பில் இருந்து, அவரது உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார். பொன்னம்பலத்துக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Ponnambalam

தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், உடல் நலம் தேறி வருகிறார். இந்த நேரத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள் குறித்து அதில் அவர் கூறி உள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வந்து உதவி செய்ததாக கூறினார். அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் என்னை அழைத்து உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. அஜித்தை தனது சொந்த தம்பி போல் நினைத்தேன் அதனால்தான் போன் செய்து நலம் விசாரிப்பார் என்று நினைத்தேன்.ஆனால் விசாரிக்கவில்லை என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர். ஆனால் நான் அப்படி எதுவும் செய்ய வில்லை. என் தந்தைக்கு 4 மனைவிகள், மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். அப்போது ஒருமுறை பீரில் விஷம் கலந்து கொடுத்தார். முதலில் அவர் அதைச் செய்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் அந்த ஸ்லோ பாய்சன் என் ரசனையோடு கலந்தது. இதனால் தான் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

Ponnambalam

இது எனக்கே தெரியாது. பின்னர் என்னுடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை. இவையெல்லாம் பொறாமையால் செய்யப்பட்டவை என பொன்னம்பலம் கூறினார். கடவுளின் அருளால் தான் நலமுடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தக்க நேரத்தில் தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கும், முகம் தெரியாத ஏராளமான ரசிகர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார். 

பொன்னம்பலம் ஒரு முறை நடுராத்திரியில் வீட்டின் பால்கனியில் நின்றிருக்கிறார். அப்போது அவருடைய சகோதரன் வீட்டின் பின்புறத்தில் ஒரு குழி தோண்டி மாந்திரீக பொம்மை, பொன்னம்பலம் பயன்படுத்திய உடை போன்றவற்றை எல்லாம் போட்டு செய்வினையும் செய்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன பொன்னம்பலம் அந்த துரோகிகளை கையும் களவுமாக பிடித்து துரத்தியுள்ளார்.

From around the web