‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Boxer Arumugam

‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் நேற்று (ஜூன் 17) காலாமானர். அவருக்கு வயது 68.

குத்துச்சண்டையில் மிகவும் ஆர்வம் உடைய ஆறுமுகம், 1985-ம் ஆண்டு காலகட்டத்தில் யாரும் நெருங்க கூடமுடியாத ஒருவராக இருந்துள்ளார். அந்த அளவுக்கு குத்துசண்டையில் பிரபலமான நாக்அவுட் கிங்காக விளங்கினார்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், இவரிடம் நேரடியாக வந்து சார்பட்டா பரம்பரையின் கதையைக் கேட்டு, அதற்கு பின்னர் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கினார். நடிகர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்திலும் இவரை மையமாக வைத்து தான் படக்குழுவினர் படத்தை இயக்கியுள்ளனர்.

Boxer Arumugam

கடந்த 1985-ம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாட் ஆக இருந்துள்ளார் பாக்ஸர் ஆறுமுகம். பிரபல குத்துச்சண்டை வீரரான இவர், ‘வா குவாட்டர் கட்டிங்’, ‘தண்ணில கண்டம்’, ‘ஆரண்ய காண்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பல பரிமாணங்களில் வாழ்ந்த ஆறுமுகம், லஷ்மி என்பவரை காதலித்து 1977-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட பாக்ஸர் ஆறுமுகம் வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர், சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, சார்பட்டா பரம்பரை மற்றும் மற்ற பரம்பரையினர் முதற்கொண்டு திரை பிரபலமான வில்லன் நடிகர் சாய்தீனா ஆகியோர் இவருடைய மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது பூதவுடல் சென்னை ராயபுரம், அமராஞ்சிபுரம் அவரது இல்லத்திலிருந்து சரியாக 5.15 மணிக்கு புறப்பட்டு காசிமேடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

From around the web