‘லியோ’ டிக்கெட் முன்பதிவு? ஆறு வாரங்களுக்கு முன்பே தொடக்கம்..!

 
Leo

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்க இருக்கிறது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நான் ரெடி’ பாடல் வெளியாகி 10 மில்லியன் வீவ்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதேபோல், நடிகர் அர்ஜூனின் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


இந்த நிலையில் லியோ படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி லியோ படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. இதனை பட வெளியீட்டு நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

From around the web