பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. திரையுலகில் தொடரும் சோகம்!

 
Rio Kapadia

பிரபல பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா நேற்று காலமானார். அவருக்கு வயது 66.

‘தில் சாத்தே ஹை’, ‘சக் தே இந்தியா’ மற்றும் ‘ஹேப்பி நியூ இயர்’ போன்ற படங்களின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரியோ கபாடியா. மேலும் டி.வி. நிகழ்ச்சிகளான குதா ஹாபிஸ், தி பிக்புல், ஏஜெண்ட் வினோத், சப்னே சுகானே லடக்பன் ஹே ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்து இருந்தார்.

Rio kapadia

கடைசியாக ‘மேட் இன் ஹெவன்’ வெப் தொடரில் நடித்திருந்தார். அதில் அவர் மிருணால் தாக்கூரின் தந்தையாக தோன்றியிருந்தார். கேன்சரால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

மறைந்த ரியோ கபாடியாவுக்கு மரியா என்ற மனைவியும், ஃபாரா என்ற மகளும் உள்ளனர். நடிகர் ரியோ கபாடியாவின் இறுதி சடங்கு மும்பை கோரேகாவில் உள்ள மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

RIP

இவரது மறைவிற்கு இந்தி திரைப்பட நடிகர்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர். ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

From around the web