பிரபல பாலிவுட் நடிகர் வீட்டில் தவறி விழுந்து மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல எழுத்தாளரும் பாலிவுட் நடிகருமான அகில் மிஸ்ரா வீட்டில் தவறி விழுந்து காலமானார். அவருக்கு வயது 58.
1983-ல் வெளியான ‘தாட் தேரே... கி’ படத்தின் மூலம் அறிமுகமனாவர் அகில் மிஸ்ரா. இந்தப் படத்திற்கு அவர் எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து, ‘டான்’, ‘காந்தி மை பாதர்’, ‘ஷிகார்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2009-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தில் துபே என்ற கதாபாத்திரத்தில் நூலகராக நடித்து பிரபலமானார்.
இவரது மனைவி சூசான் பெர்னர்டும் நடிகை ஆவார். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அகில் மிஸ்ரா, நேற்று சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பெஞ்சில் ஏறிய அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த அடிபட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி அகில் மிஸ்ரா உயிரிழந்தார். அகில் மிஷ்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ள நிலை அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கப் பட்டுள்ளன.
This was us 💔 always engaging with each other,talking,many a times just by a glance ...
— Sᴜᴢᴀɴɴᴇ Bᴇʀɴᴇʀᴛ (@suzannebernert) September 22, 2023
You were Myme and I was yours ❤️ am overwhelmed by all the love pouring out, and I wish that your love takes his soul ahead to where it is going...like a wave ...
I am thanking everyone here… pic.twitter.com/FRkZyPAdYL
ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரது மனைவி சூசான் உடனடியாக மும்பை திரும்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘என் இதயம் உடைந்தது, என் வாழ்க்கை துணை என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார். அகில் மிஸ்ராவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.