பிக் பாஸ் டைட்டில் வின்னர் அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா?

 
Big boss 7

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வெற்றியாளர் பல்லவி பிரசாந்த் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Big boss 7

தமிழில் சீசன் 7 தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7ன் பைனல்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தெலுங்கு பிக் பாஸில் பல்லவி பிரசாந்த் மற்றும் அமர் தீப் என இரண்டு போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பல்லவி பிரசாந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியே வந்ததும் அவர்கள் சமாதானமாகி நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் தெலுங்கு பிக்பாஸில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக பல்லவி பிரசாந்த் அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் 2-ம் இடம் பிடித்த அமர்தீப்பின் காரை சாலையில் மறித்து தாக்கி உள்ளனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் செய்த இந்த அடாவடித்தனத்தால் தற்போது பல்லவி பிரசாந்த் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அவரை கைது செய்த போலீசார், அவர்மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக இப்படி ரசிகர்கள் அடாவடித்தனம் செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web