கலாஷேத்ரா ஆசிரியருக்கு சப்போர்ட் செய்த பிக்பாஸ் அபிராமி... கொதிந்தெழுந்த பாடகி சின்மயி!!

 
Abirami - chinmayi

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் தொடர்பான நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் கருத்துக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

2018-ல் வெளியான ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். அதன்பின், அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இவரிடம் கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. எனக்கு இது பற்றி பேசுவதில் விருப்பம் இல்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் கேட்கக்கூடாது. நிறைய பேர் ஒரு தரப்பு செய்திகளை கேட்டுக்கொண்டு நிறைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். 89 ஆண்டுகளாக நாங்கள் படித்த கல்லூரியில் இப்படி ஒரு புகார் சொல்லும் அளவுக்கு எதுவுமே நடக்கவில்லை.

Kadia

இப்போது வந்து யார் யாரெல்லாமோ கருத்து சொல்கிறார்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் கலாஷேத்ராவில் படிக்காதவர்கள் கூட கலாஷேத்ராவை பற்றி விசாரிக்கிறார்கள். கலாஷேத்ரா என்ற ஒரு பெயரை கூட சரியாக உச்சரிக்கக்கூட தெரியாதவர்கள் நிறைய பேர் அதுபற்றி தவறாக சொல்கிறார்கள்.

எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. கலாஷேத்ரா மாணவியாக நான் சொல்வது என்னவென்றால், கலாஷேத்ரா குறித்து அவதூறு பரப்பும் வேலை தற்போது நடந்து வருகிறது. என்ன நடக்கிறது என்று எங்களுக்கே புரியவில்லை. இதற்கு காரணம், ஒரு தரப்பு தகவல்களை கேட்டு எப்படி உறுதியாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் ரேவதிக்கு ஆதரவாக நிற்கிறேன். காரணம் அவர்கள் தற்போதுதான் இயக்குநர் ஆனார். இந்த பிரச்சனை 10 ஆண்டுகளாக நடப்பதாக சொல்கிறார்கள். அப்போது ரேவதி அவர்கள் இயக்குநராக இல்லை. ஆனால், அனைவரும் ரேவதியை குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. இதுபோல் நிறைய கேள்விகள் உள்ளன.

அந்த ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பே வழங்கவில்லை. அவரது வாயை திறந்து என்ன நடந்தது என்று பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் உள்ளது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி இருக்கிறார். அவர்கள் யாரை பற்றியும் யாருமே நினைக்கவில்லை. நாங்கள் மிகவும் பெருமையாக நினைத்த ஆசிரியர்களை மிக மோசமாக இழிவுபடுத்தி பேசி உள்ளார்கள்.


உற்சவத்துக்கும், நல்ல நிகழ்ச்சிகளுக்காகவும் போய்கொண்டு இருந்த கல்லூரி. நல்ல விசயத்துக்காக செய்தியாளர்களும், போலீசும் சென்றால் சரி. ஒரு முறை குடியரசுத் தலைவர் இங்கு வந்திருந்தது நன்றாக இருந்தது. இது நியாயமான விசயமாக இல்லை. எத்தகைய துன்புறுத்தலாக இருந்தாலும் நடந்த நேரத்தில் வெளிப்படையாக நாம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகை அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக பேசுவதாக பல நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் உண்மைதான். உண்மை பொய்யாகி விடாது என்று பதிவிட்டு இருக்கிறார். அதே போல தனக்கு நேர்ந்தபாலியல் தொல்லையை போன்று பிரபல ஹாலிவுட் பாடகி லேடி காகாவிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்த செய்தியையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பகிர்ந்திருக்கிறார்.

From around the web